/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்ய கோரிக்கை
/
குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்ய கோரிக்கை
குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்ய கோரிக்கை
குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்ய கோரிக்கை
ADDED : அக் 21, 2025 11:30 PM
செங்கல்பட்டு: உள்ளாட்சிகளில், குடிநீர் விநியோகத்தில், குடிநீரில் குளோரின் கலந்து விநியோக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் உள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை, ஒவ்வொரு மாதமும், 5 மற்றும் 20ம் தேதிகளில், சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் ஊராட்சிகள் துறை சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
இதை சில ஊராட்சிகளில் செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தொட்டிகளை சுத்தம் செய்யும் பொழுது, ஜி.பி.எஸ் புகைப்படங்கள் எடுத்து, ஆவணமாக பராமரிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும், குளோரின் செய்த குடிநீர் ஊரட்சியின் கடைசி வீடுவரை இருப்பதை உறுதி செய்ய வேண் டும் என, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கடந்த செப்., 25ம் தேதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் விக்னேஷ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை பெரும்பாலன ஊராட்சிகள் செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது.
இதை தவிர்க்க, குளோரின் கலந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.