/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா போதை வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
/
கஞ்சா போதை வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மே 20, 2025 12:37 AM
ஊரப்பாக்கம், ஊரப்பாக்கத்தில், கஞ்சா போதைக்கு அடிமையான கால் டாக்சி ஓட்டுநர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி, பத்தரை கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 30. இவர், சென்னை, போரூரில் உள்ள 'ஊபர்' கால்டாக்சி நிறுவனத்தில், கார் ஓட்டுநராக பணிபுரிந்தார்.
இவர், கடந்த 16ம் தேதி, ஊரப்பாக்கம், கக்கன் தெருவிலுள்ள, கார் ஓட்டுநரான நண்பர் ஜார்ஜ், 34, என்பவரை சந்திக்க வந்துள்ளார். பின், ஜார்ஜ் வேலைக்கு சென்றுவிட, தேவேந்திரன் மட்டும் அந்த அறையில் இருந்துள்ளார்.
கடந்த 18ம் தேதி, வேலை முடித்து அறைக்கு திரும்பிய ஜார்ஜ், அங்கு தேவேந்திரன் இல்லை என்பதை அறிந்து, மண்ணிவாக்கத்தில் வசிக்கும் தேவேந்திரனின் அண்ணன் தியாகராஜனுக்கு போன் செய்துள்ளார்.
அங்கும் அவர் செல்லவில்லை என தெரிந்ததால், ஜார்ஜ் வழக்கம் போல தன் பணிகளை செய்துள்ளார்.
இந்நிலையில், தன் வீட்டின் மொட்டை மாடியிலுள்ள பாழடைந்த அறைக்கு, நேற்று காலை 10:00 மணியளவில், எதார்த்தமாக ஜார்ஜ் சென்ற போது, அந்த அறையில் தேவேந்திரன் துாக்கில் தொங்கி, இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து, ஜார்ஜ் அளித்த புகாரின்படி சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார், தேவேந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தேவேந்திரன் கஞ்சா பழக்கத்திற்கு ஆளானவர் என்பதும், மூன்று மாதமாக குடும்பத்தாரிடம் பேசாமல் விரக்தியில் இருந்ததும், கஞ்சா போதையில் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளதும் தெரிந்துள்ளளது.