/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குட்கா விற்ற வாலிபர் மீது வழக்கு
/
குட்கா விற்ற வாலிபர் மீது வழக்கு
ADDED : பிப் 09, 2025 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, சென்னேரி அடுத்த ஒவர்சம்பேட்டை பகுதியில் உள்ள மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த கடையில் போலீசார் சோதனை நடத்தி, விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 400 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் ஆனந்த்,32, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.