/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குட்கா பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு பதிவு
/
குட்கா பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : நவ 28, 2024 02:50 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த பரனுார் மற்றும் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள கடைகளில், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பரனுார் அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் உள்ள வடிவேல், 27, என்பவரின் மளிகை கடையில், போலீசார் சோதனை நடத்தினர்.
அதில், 350 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மகேந்திரா சிட்டியில் உள்ள கஜேந்திரன், 37, என்பவரின் கடையை, போலீசார் சோதனை செய்தனர்.
அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த, 60 குட்கா பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், வடிவேல் மற்றும் கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.