/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண் அரிப்பால் வலுவிழந்த சிமென்ட் சாலை
/
மண் அரிப்பால் வலுவிழந்த சிமென்ட் சாலை
ADDED : பிப் 22, 2024 10:35 PM

அச்சிறுபாக்கம், ஆத்துார் ஊராட்சிக்குட்பட்ட சிவன் கோவில் தெரு, தொழுப்பேடு - சூணாம்பேடு நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
கடந்த 2021-ல் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஒட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் நுாலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டடங்கள் அந்த சாலையோரம் அமைந்துள்ளது.
மேலும், நெடுஞ்சாலையை இணைக்கும் இச்சாலையோரத்தில் உள்ள மழைநீர் கால்வாய் ஓரம், சிமென்ட் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, சரிந்து வருகிறது.
இந்த சாலை வழியாக தினமும் கார், ஆட்டோ, பள்ளி வேன் மற்றும் இருசக்கரம் என, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. பழுதடைந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர், சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.