/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கச்சூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு
/
திருக்கச்சூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : பிப் 06, 2025 10:24 PM
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி சாந்தி,41.
இவர், சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், வழக்கம் போல தன் டி.வி.எஸ்., ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார்.
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், திருக்கச்சூர் பகுதியில் அணுகு சாலையில் சென்றார்.
அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், சாந்தி கழுத்தில் அணிந்து இருந்த 3.5 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சாந்தி, மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

