/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்

ADDED : அக் 08, 2025 09:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழைநீர் வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்
திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் பழண்டியம்மன் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சிமென்ட் சாலைகள் உள்ளன.
ஆனால், மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் வசதி இல்லை. இதனால் மழை நேரத்தில், சாலையில் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
மாணவ - மாணவியர் பள்ளிக்கு செல்லும்போது, தண்ணீர் தேங்கிய இடத்தில் ஷூவை கழற்றி கையில் எடுத்து சென்று, மீண்டும் போட்டுச் செல்கின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்.
- எம்.கிருஷ்ணன்,
மேட்டுத்தண்டலம்.