sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சென்னை -- மாமல்லை இ.சி.ஆர்., ஏப்.,1 முதல் சுங்க கட்டணம் உயர்வு

/

சென்னை -- மாமல்லை இ.சி.ஆர்., ஏப்.,1 முதல் சுங்க கட்டணம் உயர்வு

சென்னை -- மாமல்லை இ.சி.ஆர்., ஏப்.,1 முதல் சுங்க கட்டணம் உயர்வு

சென்னை -- மாமல்லை இ.சி.ஆர்., ஏப்.,1 முதல் சுங்க கட்டணம் உயர்வு


ADDED : மார் 28, 2025 08:49 PM

Google News

ADDED : மார் 28, 2025 08:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:சென்னை அக்கரை -- மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, திருத்திய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், கிழக்கு கடற்கரை சாலையை பராமரித்து, சுங்க கட்டண சாலையாக நிர்வகிக்கிறது. இத்தடத்தில் கடக்கும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணம், ஆண்டுதோறும் ஏப்., 1ம் தேதி முதல் உயர்த்தப்படும். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக, ஏப்ரலில் உயர்த்தப்படாமல், தேர்தல் முடிந்து ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போது வழக்கம் போல், ஏப்., 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டு, திருத்திய கட்டணம் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, புதிய கட்டணம் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வாகன வகை - ஒரு முறை பயணம் / ஒரு முறை சென்று திரும்புதல் / ஒரு நாளில் பல முறை பயணம் / 90 நாட்களில் 50 முறை பயணம் / மாதாந்திர பயண அட்டை


கார், ஜீப், மூன்று சக்கர வாகனம் - 50 / 75 / 135 / 1,645 / 2,890
இலகுரக வணிக, சரக்கு வாகனங்கள் - 80 / 120 / 220 / 2,660 / 4,665
பேருந்து, இரண்டு அச்சு சரக்கு வாகனம் - 165 / 250 / 460 / 5,570 / 9,780
சரக்கு வாகனம் - மூன்று அச்சு - 180 / 275 / 500 / 6,080 / 10,670
பல அச்சு சரக்கு வாகனம் - 260 / 395 / 720 / 8,740 / 15,335
கனரக கட்டுமான வாகனங்கள், 7 மற்றும் அதிக அச்சுகள் - 320 / 480 / 880 / 10,640 / 18,670
* உள்ளூர் வணிக வாகனங்கள் மாதாந்திர கட்டணம் - ரூபாயில்
சரக்கு ஆட்டோ, டாக்சி, மேக்சி கேப், மூன்று சக்கர வாகனம் - 250
இலகு ரக வணிக வாகனம், ஜே.சி.பி., கிரேன் - 320
டிரக்ஸ், பல அச்சு வாகனங்கள் - 990
பள்ளி பேருந்து - 1,980








      Dinamalar
      Follow us