/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை அச்சீவர்ஸ் அணி முதலிடம்
/
மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை அச்சீவர்ஸ் அணி முதலிடம்
மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை அச்சீவர்ஸ் அணி முதலிடம்
மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை அச்சீவர்ஸ் அணி முதலிடம்
ADDED : ஜூலை 29, 2025 11:39 PM

சென்னை, மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியின் எலைட் பிரிவில், சென்னை அச்சீவர்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.
தமிழக டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, நகரின் பல்வேறு இடங்களில், மொத்தம் 321 போட்டிகள் வீதம் நடந்தன. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 59 அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதிப் போட்டிகள், சென்னை, ஐ.சி.எப்.,பில் நடந்தது. இதில், 'எலைட்' பிரிவில், சென்னை அச்சீவர்ஸ் மற்றும் ராமன் டி.டி.எச்.பி.சி., அணிகள் எதிர்கொண்டன.
விறுவிறுப்பான அந்த ஆட்டத்தின் முடிவில், 4 - 0 என்ற செட் கணக்கில், சென்னை அச்சீவர்ஸ் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை தட்டிச் சென்றது.
'ஓபன்' பிரிவில், வேவ் அணி, 3 - 1 என்ற செட் கணக்கில், தாஸ் அன் கோவை வீழ்த்தியது. சப் - ஜூனியர் பிரிவில், வேவ் லைப் பியூச்சர்அணி, 3 - 0 என்ற செட் கணக்கில், கே.டி.டி.சி., கிளப் அணியை தோற்கடித்தது.
கார்ப்பரேட் பிரிவில், வேவ் அணி, 3 - 1 என்ற செட் கணக்கில் ஷார்க்ஸ் அணியையும், சோசியல் கிளப் பிரிவில், எஸ்.வி.எஸ்., கிளப், 3 - 1 என்ற செட் கணக்கில், ஆந்திரா கிளப்பையையும் வென்று, முதலிடங்களை பிடித்தன.