/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலுார் கிராம அங்கன்வாடி எதிரே மழைநீர் தேங்குவதால் குழந்தைகள் அவதி
/
வேலுார் கிராம அங்கன்வாடி எதிரே மழைநீர் தேங்குவதால் குழந்தைகள் அவதி
வேலுார் கிராம அங்கன்வாடி எதிரே மழைநீர் தேங்குவதால் குழந்தைகள் அவதி
வேலுார் கிராம அங்கன்வாடி எதிரே மழைநீர் தேங்குவதால் குழந்தைகள் அவதி
ADDED : நவ 24, 2025 03:02 AM

சித்தாமூர்: வேலுார் கிராமத்தில், அங்கன்வாடி மையம் எதிரே மழைநீர் தேங்குவதால், சகதியில் நடந்து செல்ல முடியாமல், குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் கிராமத்தில், அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, 15 குழந்தைகள் ஆரம்ப கல்வி படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் எதிரே மழைநீர் தேங்கி உள்ளதால், சகதியில் நடந்து செல்ல முடியாமல், குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பல நாட்கள் தொடர்ந்து மழைநீர் தேங்குவதால், கொசு உற்பத்தியாக குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அங்கன்வாடி மையம் தாழ்வான பகுதியில் உள்ளதால், மண் கொட்டி சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடி மையம் எதிரே மண் கொட்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.