/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வழிகாட்டி பலகையை மறைக்கும் கிளைகள் வெட்டி அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
வழிகாட்டி பலகையை மறைக்கும் கிளைகள் வெட்டி அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
வழிகாட்டி பலகையை மறைக்கும் கிளைகள் வெட்டி அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
வழிகாட்டி பலகையை மறைக்கும் கிளைகள் வெட்டி அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : நவ 24, 2025 03:01 AM

மறைமலை நகர்: செங்கல்பட்டு புறநகரில் உள்ள நெடுஞ்சாலைகளில், வழிகாட்டி பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு புறநகர் பகுதியில் செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை, செங்கல்பட்டு - - மாமல்லபுரம் சாலை, அனுமந்தபுரம் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, சிங்கபெருமாள் கோவில் -- மருதேரி சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்த நெடுஞ்சாலை ஓரத்தில் வேகத்தடைகளை குறிக்கும் குறியீட்டு எச்சரிக்கை பலகைகள், வழிகாட்டி பலகைகள், துார அளவு கற்கள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
ஆனால், வழிகாட்டி பலகைகளை மறைக்கும் வகையில், மரக்கிளைகள் வளர்ந்துள்ளன. மேற்கண்ட சாலைகளை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
வழிகாட்டி பலகையை மரக்கிளைகள் மறைப்பதால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் அலைகின்றனர்.
அத்துடன், சாலையோர நடப்பட்டுள்ள, துார அளவு கற்களில் எழுத்துகள் சரிவர தெரிவதில்லை. இதனாலும், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.
எனவே, ஆபத்தான வளைவுகள், வேகத்தடை உள்ள இடங்கள் குறித்த வழிகாட்டி பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

