/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு கடன் சங்கங்களில் நவ., 13ல் பேரவை கூட்டம்
/
கூட்டுறவு கடன் சங்கங்களில் நவ., 13ல் பேரவை கூட்டம்
கூட்டுறவு கடன் சங்கங்களில் நவ., 13ல் பேரவை கூட்டம்
கூட்டுறவு கடன் சங்கங்களில் நவ., 13ல் பேரவை கூட்டம்
ADDED : நவ 04, 2024 03:14 AM
செய்யூர், எல்.எண்டத்துார் ஆகிய பகுதிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், வரும் 13ம் தேதி சிறப்பு பொதுப்பேரவை கூட்டம் நடத்தப்படுவதாக, நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
மதுராந்தகம் சரக துணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில், இச்சங்கங்கள் இயங்குகின்றன. சங்க விவகார எல்லைப் பகுதியில், புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் துவங்க, தடையில்லா சான்று வழங்குவது, சங்க விவகார எல்லைப் பகுதி கிராமங்களை பிரித்து அளிப்பது, சங்க செயலர் கொண்டுவரும் பிற தீர்மானங்கள் குறித்து தீர்மானிக்கப்பட உள்ளன.
இதற்காக, சங்க பொது பேரவைக் கூட்டம், அந்தந்த சங்க அலுவலகங்களில், வரும் 13ம் தேதி காலை 11:00 மணிக்கு நடத்தப்படுவதாக, சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -