/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் மீது புகார்
/
பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் மீது புகார்
பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் மீது புகார்
பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் மீது புகார்
ADDED : ஜன 29, 2024 04:08 AM
கூடுவாஞ்சேரி, : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியாக பகவதி என்பவர் இருந்து வருகிறார்.
இவரின் கணவர் நாகராஜன் தன்னை மிரட்டுவதாக, லட்சுமணன் வினோத்குமார் என்பவர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில், அவர் கூறியிருப்பதாவது:
கன்னிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், மேலாளராக வேலை செய்து வருகிறேன். அதோடு, கன்னிவாக்கம் கிராமத்தில், லேண்ட் டெவலப் செய்யும் ஒப்பந்தம் எடுத்து, வேலை செய்து வருகிறேன்.
பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் நாகராஜன் என்பவர், தங்களது கிராமத்தில் உள்ள சாலைக்கு மண் வேண்டும் எனக் கேட்டு, மூன்று லோடு லாரி மண்ணை பெற்றார்.
அதை, அவர் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். மீண்டும் எனக்கு 25 லோடு லாரி மண் வேண்டும் என்றும், அதை கொடுக்கவில்லை என்றால் வேலை செய்ய விடமாட்டேன் என்றும் மிரட்டுகிறார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர் நாகராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
என் மீது வேண்டும் என்றே தவறான புகார் தெரிவித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக, இவ்வாறு புகார் மனு வழங்கி உள்ளனர்.
இந்த புகார் போலியானது என்பது தெரியும். அதனால், காவல் துறை அதிகாரிகள் என்னை விசாரிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.