/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாழம்பூர் - நத்தம் குறுகிய சாலையில் நெரிசல்
/
தாழம்பூர் - நத்தம் குறுகிய சாலையில் நெரிசல்
ADDED : பிப் 16, 2024 12:09 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தாழம்பூர் ஊராட்சிக்குட்பட்ட நத்தம், காரணை உள்ளிட்ட துணை கிராமங்களில், 8,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியின் அருகே, புதுப்பாக்கத்தில் சட்டக்கல்லுாரியும், சிறுசேரியில் சிப்காட் தொழிற்பூங்காவும் உள்ளன. பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சாலையாக, தாழம்பூர்- - நத்தம் இணைப்பு சாலை உள்ளது.
இச்சாலை வழியாக, சிறுசேரி சிப்காட்டிற்கு ஏராளமான ஐ.டி., ஊழியர்கள், மற்ற தொழிலாளர்கள் செல்கின்றனர். பைக், கார் போன்ற வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை, ஏராளமான வாகனங்கள் மேற்கண்ட சாலையில் செல்கின்றன.
சாலை மிகவும் குறுகியதாகவும், சாலையை ஒட்டி பள்ளம் உள்ளதாலும், எதிரே வரும் லாரி, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள், ஒன்றையொன்று கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, சாலையை விரிவாக்கம் செய்து, முறையாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.