/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுஞ்சூரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்
/
பவுஞ்சூரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்
பவுஞ்சூரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்
பவுஞ்சூரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : மே 25, 2024 06:30 PM

பவுஞ்சூர்:
பவுஞ்சூர் பஜார் பகுதியில் முதுகரை - கூவத்துார் இடையேயான, 25 கிலோமீட்டர் தார் சாலை உள்ளது. இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
பவுஞ்சூர் பஜார் பகுதியில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பவுஞ்சூர் பஜார் பகுதியில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க முடிவு செய்து, 'டெண்டர்' விடப்பட்டது.
இந்நிலையில், சாலையின் இரண்டு புறங்களிலும் தலா 2 மீட்டர் அகலத்தில், 300 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.