/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போந்துார் ஊராட்சியில் ரூ.7.8 லட்சத்தில் மகளிர் கழிப்பறை கட்டும் பணி துவக்கம்

ADDED : ஆக 07, 2025 01:40 AM

சித்தாமூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, போந்துார் ஊராட்சியில் பழுதடைந்து இருந்த மகளிர் கழிப்பறை இடித்து அகற்றப்பட்டு, 7.80 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
சித்தாமூர் அடுத்த போந்துார் ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மகளிர் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பெண்கள் இந்த கழிப்பறை வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். நாளடைவில், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கழிப்பறை வளாகம் பழுதடைந்து, பயன்படுத்தப்படாமல் பல மாதங்களாக பூட்டியே கிடந்தது.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், இயற்கை உபாதைகள் கழிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, நம் நாளி தழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ், பழைய கழிப்பறை வளாகம் இடித்து அகற்றப்பட்டு, 7.80 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்போது, புதிய மகளிர் கழிப்பறை வளாகம் அமைக்க கட்டுமானப் பணிகள் துவங்கி உள்ளன.