/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடில் நீர்வரத்து பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு கட்டடப்பணி
/
சூணாம்பேடில் நீர்வரத்து பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு கட்டடப்பணி
சூணாம்பேடில் நீர்வரத்து பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு கட்டடப்பணி
சூணாம்பேடில் நீர்வரத்து பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு கட்டடப்பணி
ADDED : டிச 16, 2024 02:06 AM

சூணாம்பேடு:சூணாம்பேடு ஆரவல்லிநகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட நரிகுறவர் குடும்பத்தினர் கால்நடை மருத்துவமனை அருகே வசித்து வருகின்றனர்.
வருவாய்த்துறை சார்பாக 17 குடும்பத்தினருக்கு சூணாம்பேடு ஏரிக்கரை பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
குடியிருப்புப் பகுதியில் இருந்து தொலைதுாரத்தில் உள்ளது மற்றும் நீர்வரத்து பகுதி என்பதால்
பாதுகாப்பு கருதி மாற்று இடம் வழங்க வேண்டும் என, நரிக்குறவ மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம் பெஞ்சல் புயலில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட இடம் முழுதும் தண்ணிரில் மூழ்கியது.
இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன.
முதற்கட்டமாக 6 வீடுகள் கட்டுவதற்கான அடித்தளம் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில்,
கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழைக் காரணமாக கட்டுமானப் பணிகள் நடக்கும் பகுதியில் மழைநீர் சூழ்ந்து உள்ளது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆரவல்லிநகர் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கீடு செய்து, குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நரிக்குறவ மக்கள் எதிர்பார்கின்றனர்.

