/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் தொடர் கனமழை சாலை, குடியிருப்புகளில் வெள்ளம்
/
செங்கையில் தொடர் கனமழை சாலை, குடியிருப்புகளில் வெள்ளம்
செங்கையில் தொடர் கனமழை சாலை, குடியிருப்புகளில் வெள்ளம்
செங்கையில் தொடர் கனமழை சாலை, குடியிருப்புகளில் வெள்ளம்
ADDED : டிச 01, 2024 12:29 AM

செங்கல்பட்டு:வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று முன்தினத்திலிருந்து கன மழை பெய்து வருகிறது.
கன மழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மாவட்டத்தில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், மழை வெள்ளம் அதிகமாக சென்றதால், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில், வேதாசலம் நகர் நுழைவாயில் பகுதியில், மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் புளியமரம் விழுந்தது. அதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார், தீயணைப்புத்துறையினர் புளிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
அண்ணா நகர் பகுதியில், சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில், அனைத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஏரிகள் நிலை
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில், 54 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகிறது. ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 620 ஏரிகளில், 15 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகிறது.
அதுமட்டுமின்றி, 2,512 குளங்களில், 70 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.