/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடலுார் சின்னகுப்பம் வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்து பாதிப்பு
/
கடலுார் சின்னகுப்பம் வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்து பாதிப்பு
கடலுார் சின்னகுப்பம் வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்து பாதிப்பு
கடலுார் சின்னகுப்பம் வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்து பாதிப்பு
ADDED : நவ 27, 2024 11:55 PM

கூவத்துார்:கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில், சின்னக்குப்பம் மீனவர் பகுதி உள்ளது. ஊராட்சி நிர்வாகம், இப்பகுதி தெருக்களில், சில ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் சாலை அமைத்துள்ளது.
குறுகிய அகல தெருக்கள் என்பதால், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படாமல், வீட்டு சுவரை ஒட்டியே சாலை அமைக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும்போது, தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து சூழ்ந்து, வீடுகளுக்குள் புகுகிறது.
நேற்று முன்தினம் பெய்த கனமழையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, இப்பகுதியினர் பாதிக்கப்பட்டனர். காற்றழுத்த தாழ்வு, புயல் ஆகியவற்றின்போது, மழைநீரால் பாதிப்பு அதிகரிக்கும்.
மழைநீர் வீடுகளை சூழாமல் தவிர்க்க, மழைநீரை பகிங்ஹாம் கால்வாய் அல்லது பாலாற்றில் வெளியேற்றும் வகையில், வடிகால்வாய் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.