/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமடைந்த சிமென்ட் சாலை வெள்ளிமேடு மக்கள் அவதி
/
சேதமடைந்த சிமென்ட் சாலை வெள்ளிமேடு மக்கள் அவதி
ADDED : ஜன 12, 2025 02:14 AM

செய்யூர், செய்யூர் ஊராட்சியில் 15,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை, பராமரிப்பின்றி ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது.
குறிப்பாக, வள்ளுவன் தெருவில் சாலை முழுதும் சேதமடைந்து, மண் சாலையாக மாறி உள்ளதால், மழைக் காலத்தில் சேறும் சகதியுமாகி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
குடியிருப்புகள் அதிகம் உள்ள வெள்ளிமேடு பகுதியில், சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், அப்பகுதிவாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கடுமையாக சேதமடைந்துள்ள சிமென்ட் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.