/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பெஞ்சலில்' சேதமான மின்கம்பங்கள் மாணவர் விடுதியில் விபத்து அபாயம்
/
'பெஞ்சலில்' சேதமான மின்கம்பங்கள் மாணவர் விடுதியில் விபத்து அபாயம்
'பெஞ்சலில்' சேதமான மின்கம்பங்கள் மாணவர் விடுதியில் விபத்து அபாயம்
'பெஞ்சலில்' சேதமான மின்கம்பங்கள் மாணவர் விடுதியில் விபத்து அபாயம்
ADDED : மார் 21, 2025 11:02 PM

செய்யூர் ய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி, சேம்புலிபுரம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு, கடப்பாக்கம் துணை மின்பகிர்வு மனையில் இருந்து, மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்ய, சாலை ஓரம் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து பழுதடைந்து இருந்தது.
கடந்தாண்டு பருவமழையின் போது,'பெஞ்சல்' புயலால் பலத்த காற்று வீசியதால், கடப்பாக்கம் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் இருந்த தைலமரம், இந்த மின்கம்பங்கள் மீது சாய்ந்து, மின்கம்பங்கள் சேதமடைந்தன.
கடந்த டிச., 2ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், இப்பகுதியில் ஆய்வு செய்ததால், தற்காலிகமாக மின்கம்பிகள் கயிறு கொண்டு உயர்த்தி அமைக்கப்பட்டு, மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.
மின்கம்பம் சேதமடைந்து, 3 மாதங்கள் கடந்த நிலையில், தற்போது வரை புதிய கம்பங்கள் மாற்றப்படமல் உள்ளன. இதனால் மின்கம்பம் அரசு மாணவர் விடுதி மீது சாய்ந்து, விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
எனவே, மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய கம்பம் நட்டு மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.