/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான மின் கம்பங்கள் நந்திவரத்தில் விபத்து அபாயம்
/
சேதமான மின் கம்பங்கள் நந்திவரத்தில் விபத்து அபாயம்
சேதமான மின் கம்பங்கள் நந்திவரத்தில் விபத்து அபாயம்
சேதமான மின் கம்பங்கள் நந்திவரத்தில் விபத்து அபாயம்
ADDED : செப் 22, 2024 03:22 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் பெரிய தெருவில் மின் மாற்றி உள்ளது.
இந்த மின்மாற்றியில் இருந்து, சுற்று வட்டார பகுதிக்கு மின் வினியோகம்செய்யப்பட்டு வருகிறது.மின் மாற்றியின் அருகில், கிழக்கு மற்றும் மேற்கு பக்கத்தில் மின் கம்பங்கள் உள்ளன.
இந்த இரண்டு மின்கம்பங்களின் சிமென்ட் காரைகள் உடைந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன.
விரைவில் மழைக்காலம் வர இருப்பதால், காற்று மழையால், சேதமான மின் கம்பம், மின்மாற்றியில் விழுந்து, மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, அதற்கு முன்பாக, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமான மின் கம்பங்களை அகற்றி, புதிய மின் கம்பங்கள் மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.