/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதாள சாக்கடை பள்ளத்தால் கிளாம்பாக்கத்தில் அபாயம்
/
பாதாள சாக்கடை பள்ளத்தால் கிளாம்பாக்கத்தில் அபாயம்
ADDED : அக் 29, 2025 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவாயில் முன் உள்ள, பாதாள சாக்கடை பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் நுழைவாயிலில், பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் இரும்பு மூடி சேதமடைந்து, அங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி, பெரும் விபத்து நடக்க வாய்ப்புள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, பாதாள சாக்கடை பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

