/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புது அங்கன்வாடி கட்டடம் தண்டலத்தில் அமைக்க முடிவு
/
புது அங்கன்வாடி கட்டடம் தண்டலத்தில் அமைக்க முடிவு
ADDED : மார் 25, 2025 06:29 PM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பெருமாள் கோவில் பின்புறத்தில் 30 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.
இதில் 10 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும் கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 16 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.
அங்கன்வாடி மையம் பழுதடைந்த ஓடு போட்ட கட்டடத்தில் செயல்பட்டு வந்ததால், முன்னெச்சரிக்கையாக மாற்று கட்டடத்திற்கு குழந்தைகள் மாற்றப்பட்டு, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 8 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
விரைவில் டெண்டர் விடப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கப்படும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.