தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பெயர் சேர்க்கப்படாத முதியோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்க கோரிக்கை

பெயர் சேர்க்கப்படாத முதியோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்க கோரிக்கை

பெயர் சேர்க்கப்படாத முதியோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்க கோரிக்கை


UPDATED : அக் 28, 2026 05:30 PM

ADDED : அக் 28, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 05:30 PM ADDED : அக் 28, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்: திருப்போரூர் வட்டத்தில், பெயர் சேர்க்கப்படாத நபர்களின், வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என, முதியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் வட்டத்தில், திருப்போரூர், பையனுார், மானாமதி, கரும்பாக்கம், நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம் ஆகிய குறுவட்டங்களில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், 58 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில், முதியோர் மற்றும் மாற்றத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று அத்தியாவசி பொருட்களை வாங்க சிரமப்பட்டு வந்தனர். இதனால், முந்தைய தி.மு.க., ஆட்சியில், அவர்களது வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் வகையில் ‘தாயுமானவர்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க.,அரசு, பொது விநியோகத் திட்டம் என பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இத்திட்டம் தொடங்கிய போது முதியோர் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. புதிய நபர்களின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதனால், முதியோர் பலர் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வர அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதியோர் கூறியதாவது:

ஏற்கனவே க்கும் மேற்பட்டோர் உள்ளனர். புதிதாக பெயர் சேர்க்க கோரி 100க்கும் மேற்பட்ட முதியோர் திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில் வலியுறுத்தி வருகிறோம். தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் கேட்டால் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது குறித்து அறிவிப்பு ஏதும் வரவில்லை. அரசு அறிவித்தால் புதிதாக சேர்க்கலாம் என்கின்றனர்.

எனவே, பெயர் சேர்க்கப்படாத முதியோருக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்க அரசு நடவடிக்க எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us