/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் இடையூறாக டாஸ்மாக் கடைகள் வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தல்
/
செங்கையில் இடையூறாக டாஸ்மாக் கடைகள் வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தல்
செங்கையில் இடையூறாக டாஸ்மாக் கடைகள் வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தல்
செங்கையில் இடையூறாக டாஸ்மாக் கடைகள் வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தல்
ADDED : டிச 07, 2024 12:10 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், ஜி.எஸ்.டி., சாலை அருகில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் அருகில் தலா ஒரு டாஸ்மாக் கடை, ராட்டிணங்கிணறு, அண்ணா நகர் ஆகிய பகுதியில், தலா ஒரு டாஸ்மாக் கடை என, நான்கு கடைகள் இயங்கி வருகின்றன.
இச்சாலை வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோர், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் மதுபிரியர்கள், மது குடித்துவிட்டு போதை அதிகமானதும், சாலையில் நடந்து செல்லும் பெண்களை கிண்டல் செய்கின்றனர்.
இதுமட்டுமின்றி, குடித்துவிட்டு வாகனங்களில் செல்லும் போது, தறுமாறாக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். மேலும், சாலையிலேயே மது குடித்து, திறந்வெளி குடிமையமாக சாலையை மாற்றிவிடுகின்றனர்.
இவர்களின் அட்டகாசத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையில் நடந்து செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, அண்ணாநகர் நுழைவாயில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை கடந்து செல்லும் பெண்கள், பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
இந்த கடைகளை மாற்றக்கோரி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம், சமூக ஆர்வலர்கள் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதன் பின், நகரில் இயங்கும் நான்கு டாஸ்மாக் கடைகளையும், நகருக்கு வெளியில் அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இப்பகுதியில் பெரிய சம்பவங்கள் ஏற்படும் முன், டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.