/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் வரி செலுத்தாதோர் இணைப்பு துண்டிப்பு கெடுபிடி! இம்மாதத்திற்குள் ரூ.290 கோடி வசூலிக்க இலக்கு
/
குடிநீர் வரி செலுத்தாதோர் இணைப்பு துண்டிப்பு கெடுபிடி! இம்மாதத்திற்குள் ரூ.290 கோடி வசூலிக்க இலக்கு
குடிநீர் வரி செலுத்தாதோர் இணைப்பு துண்டிப்பு கெடுபிடி! இம்மாதத்திற்குள் ரூ.290 கோடி வசூலிக்க இலக்கு
குடிநீர் வரி செலுத்தாதோர் இணைப்பு துண்டிப்பு கெடுபிடி! இம்மாதத்திற்குள் ரூ.290 கோடி வசூலிக்க இலக்கு
ADDED : மார் 04, 2024 06:39 AM
சென்னை குடிநீர் வாரியத்திற்கு, பல ஆண்டுகளாக வரி நிலுவை செலுத்தாமல் 'டிமிக்கி' கொடுத்து வருவோரின் வீட்டு இணைப்புகளை துண்டிக்கவும், ஜப்தி நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வரி வருவாயை, கடந்த ஆண்டைவிட அதிகரிப்பதற்காக, அவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வாயிலாக, தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஏரிகளில் இருந்து குடிநீர் கிடைக்கும் நிலையில், பற்றாக்குறையை போக்க, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவும், தினசரி தேவைக்கான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
சென்னையில், 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இதன் வாயிலாக ஆண்டுக்கு, வரி மற்றும் கட்டணமாக, 892 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
வீடுகளுக்கு வரியாக, ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், குடிநீருக்கு மாதக் கட்டணமாக, 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு, குடிநீர் கட்டணம் மாறுபடும்.
மொத்தம், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர். குடிநீர் இணைப்பு வழங்காத விரிவாக்க பகுதிகளில், வரி மட்டும் செலுத்துகின்றனர்.
இந்த வகையில், 2023- - 24ம் நிதியாண்டில் 892 கோடி ரூபாயும், 2022- - 23ம் ஆண்டு வரை பாக்கி தொகை, 365 கோடி ரூபாயும் சேர்த்து, 1,257 கோடி ரூபாய் வசூலாக வேண்டும்.
இதில், 900 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. மீதம் 357 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். இதில், 290 கோடி ரூபாயை, இம்மாத இறுதிக்குள் வசூலிக்கும் வகையில், குடிநீர் வாரியம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இதில், 70 கோடி ரூபாய் மத்திய, மாநில அரசு துறைகள், நிலுவைத் தொகையாக செலுத்த வேண்டும். மேலும், பல ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வைத்துள்ள 5,000 பேருக்கு, வாரிய வருவாய்த் துறை வாயிலாக 'நோட்டீஸ்' வழங்கி உள்ளது.
நோட்டீஸ் பெற்று, குறிப்பிட்ட நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும், வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பல ஆண்டுகள் வரி நிலுவை வைத்திருந்தோர் மீது, வருவாய்த் துறை குழு வாயிலாக, கடந்த நிதியாண்டில் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனால், நிலுவைத் தொகை கணிசமாக வசூலானது. அதே நடவடிக்கையை இந்த மாதமும் எடுக்க உள்ளோம்.
அரசு துறைகள் மீது நடவடிக்கை எடுப்பதில், பெரும் சவால் உள்ளது. அந்தந்த துறை செயலர்களுக்கு கடிதம் அனுப்பி, நிலுவைத் தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
--- நமது நிருபர் --

