/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிற்பம் முன் நிறுத்தப்படும் டூ - வீலர்களால் இடையூறு
/
சிற்பம் முன் நிறுத்தப்படும் டூ - வீலர்களால் இடையூறு
சிற்பம் முன் நிறுத்தப்படும் டூ - வீலர்களால் இடையூறு
சிற்பம் முன் நிறுத்தப்படும் டூ - வீலர்களால் இடையூறு
ADDED : அக் 21, 2024 01:18 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு சிற்பம் முன், பைக் ரேஸ் மற்றும் புதிய இருசக்கர வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதால், சுற்றுலா பயணியர் சிற்பத்தை ரசிக்கவும், அப்பகுதியை கடக்கவும் சிரமப்படுகின்றனர்.
சென்னை சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, மாமல்லபுரத்திற்கு வார இறுதி நாட்களில், சைக்கிள் பந்தயமாகவும், புத்துணர்வு உடல்நல பயிற்சியாகவும், வாலிபர்கள் நவீன இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அவர்கள், மாமல்லபுரத்தில் சற்றுநேரம் ஓய்வெடுக்கின்றனர்.
இங்குள்ள அர்ஜுனன் தபசு சிற்பம் முன், சாலையில் அனைத்து இருசக்கர வாகனங்களையும் நிறுத்தி, குழு புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
புதிதாக வாங்கிய புல்லட் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் வருவோர், அர்ஜுனன் தபசு சிற்பத்தின் முன் வாகனங்களை நிறுத்தி, அதை ஓட்டுவது போன்று புகைப்படம் எடுக்கின்றனர்.
அதனால், பிற பயணியர் சாலையில் நின்று சிற்பத்தை காணவும், நடந்து செல்லவும் முடியாமல் சிரமப்படுகின்றனர். இச்சிற்பத்தின் முன் வாகனம் நிறுத்தி புகைப்படம் எடுப்பதை, அதிகாரிகள் தடுக்க வேண்டும் எனெ, சுற்றுலா பயணியர் வலியுறுத்துகின்றனர்.