/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவில் வளாகத்தில் குப்பை தொட்டியின்றி சீர்கேடு
/
கந்தசுவாமி கோவில் வளாகத்தில் குப்பை தொட்டியின்றி சீர்கேடு
கந்தசுவாமி கோவில் வளாகத்தில் குப்பை தொட்டியின்றி சீர்கேடு
கந்தசுவாமி கோவில் வளாகத்தில் குப்பை தொட்டியின்றி சீர்கேடு
ADDED : டிச 14, 2024 11:25 PM

திருப்போரூர்:திருப்போரூரில், புகழ்பெற்ற கந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றி வணிக கடைகள், உணவகங்கள், வீடுகள் அதிக அளவில் உள்ளன.
இக்கோவில் தென்கிழக்கு பகுதியில் கொட்டப்படும் குப்பை, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்கிருந்த குப்பைத் தொட்டி சேதமடைந்து அகற்றப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் இங்கு, கோவில் மற்றும் வணிக கடைகளில் வெளியேறும் குப்பை மட்டும் கொட்டப்பட்டு வந்தது.
தற்போது, அப்பகுதியிலுள்ள உணவகம் மற்றும் திருமண மண்டபங்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை, உணவு கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கால்நடைகள் அதிலுள்ள உணவுக்கழிவுகளை சாப்பிட வரும் போது, வாழை இலை உள்ளிட்ட கழிவுகளை நடைபாதையில் இழுத்து வந்து விடுகின்றன.
இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, கோவில் நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து, மேற்கண்ட இடத்தில் பெரிய அளவிலான குப்பைத் தொட்டி அமைத்து, தினமும் குப்பையை அகற்ற வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.