/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி நுழைவாயிலில் வாகனங்கள் மறித்து நிறுத்துவதால் இடையூறு
/
பள்ளி நுழைவாயிலில் வாகனங்கள் மறித்து நிறுத்துவதால் இடையூறு
பள்ளி நுழைவாயிலில் வாகனங்கள் மறித்து நிறுத்துவதால் இடையூறு
பள்ளி நுழைவாயிலில் வாகனங்கள் மறித்து நிறுத்துவதால் இடையூறு
ADDED : ஜன 08, 2025 10:13 PM

மாமல்லபுரம்:: மாமல்லபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முகப்பு பகுதியில், சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதால், பள்ளிக்கு இடையூறு ஏற்படுகிறது.
மாமல்லபுரத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது.
அதன் அருகில், பாரம்பரிய சிற்பமான அர்ஜுனன் தபசு சிற்பம், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவை உள்ளன.
இவற்றை காண வரும் சுற்றுலா பயணியர் தங்களது கார், பேருந்து ஆகியவற்றை, பள்ளி முகப்பு நுழைவிட பகுதியில், வரிசையாக நிறுத்துகின்றனர்.
சிற்பங்களை ரசித்துவிட்டு திரும்ப தாமதமாவதால், வாகனங்களால் பள்ளிக்கு இடையூறு ஏற்படுகிறது.
குறிப்பாக, விடுமுறை நாளான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், இரவில் வரும் சுற்றுலா வாகனங்கள், பள்ளி நுழைவாயிலையும் அடைத்து நிறுத்தப்படுகின்றன.
திங்களன்று பள்ளியை திறக்க முற்படும் போது, நுழைவாயிலில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், வாயில் கதவை திறக்க முடியவில்லை.
வாகன ஓட்டுனர் நீண்டநேரம் கழித்து வரும் நிலையில், அதன் பிறகே ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் பள்ளியில் நுழைய முடிகிறது.
சுற்றுலா வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுவதால், பள்ளிக்கு வரும் பெற்றோர், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி சிரமப்படுகின்றனர்.
எனவே, பள்ளி முகப்பில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க, தடுப்பு அமைக்குமாறு இப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

