/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்தில் நாய்கள் தொல்லை வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
/
மதுராந்தகத்தில் நாய்கள் தொல்லை வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
மதுராந்தகத்தில் நாய்கள் தொல்லை வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
மதுராந்தகத்தில் நாய்கள் தொல்லை வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
ADDED : ஜூன் 30, 2025 01:27 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில், சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி, 14வது வார்டில், செங்குந்தர்பேட்டை உள்ளது. இப்பகுதியில் அருளாலீஸ்வரர் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெருக்களில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
இரவு நேரங்களில் ஒன்று சேரும் தெருநாய்கள், ஒன்று கூடி ஊளையிடுவதால், அப்பகுதி மக்கள் துாக்கமின்றி தவித்து வருகின்றனர். இரவில் இப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்துவதால், தவறி விழுந்து காயமடைகின்றனர். பலர் நாய்கள் கடித்து, சிகிச்சையும் பெற்றுள்ளனர்.
எனவே, மதுராந்தகம் நகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.