/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டாங்கொளத்துாரில் கதவை உடைத்து திருட்டு
/
காட்டாங்கொளத்துாரில் கதவை உடைத்து திருட்டு
ADDED : நவ 13, 2024 08:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் கோபாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் கோகுலபாஸ்கர், 45. பால் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று காலை, தனது குடும்பத்துடன் அருகில் உள்ள சொந்த ஊரான கோனாதி கிராமத்திற்கு சென்றார். மாலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3.5 சவரன் தங்க நகைகள், 4 வெள்ளி கொலுசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், விட்டில் ஆய்வு செய்து வருகின்றனர். மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.