sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருப்போரூர் ஒன்றிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாட்டில் சந்தேகம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

/

திருப்போரூர் ஒன்றிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாட்டில் சந்தேகம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

திருப்போரூர் ஒன்றிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாட்டில் சந்தேகம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

திருப்போரூர் ஒன்றிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாட்டில் சந்தேகம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்


ADDED : செப் 14, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 14, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் முறையாக உள்ளதா என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், 50 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி உள்ளது. இந்த ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

மக்கள் சொந்த வீட்டு கனவுடன், தங்கள் வேலை, கல்வி போன்ற போக்குவரத்து வசதிக்கேற்ப, அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறுகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளின் எண்ணிக்கை, கட்டடத்தின் பரப்பளவுகளுக்கு ஏற்ப கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, சட்ட விதிகள் உள்ளன.

ஆனால், சில அடுக்குமாடி குடியிருப்புகளில், சட்ட விதிகளை பின்பற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது.

பல அடுக்குமாடி குடியிருப்புகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவ்வாறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வசதி இருந்தாலும், தேவையான அளவிற்கு அமைக்கப்பட்டிருக்காது. அதே நேரத்தில், அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக இங்குகிறதா என்பதும் சந்தேகம் தான்.

இவ்வாறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பல இடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வசதியில்லாத அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர், நீர்வரத்து வடிகால்வாய்கள், ஏரி போன்ற நீர்நிலைகளில், இரவு நேரத்தில் விடப்படுவதாகவும் புகார் உள்ளது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

எனவே, திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வசதிகள் போதியதாக உள்ளதா, அவை முறையாக செயல்படுகிறதா என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அடுக்குமாடி குடியிருப்புகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக அமைப்பதில்லை. கட்டுமான திட்ட அனுமதி பெறும் போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான வடிவமைப்பு விபரங்களை தெரிவித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள், அவ்வாறு முறையாக தெரிவிக்காமல் அனுமதி பெறுகின்றன. அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை.

அதே நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டுமான நிறுவனங்கள் கழிவுநீர் சுத்திகரிப்புக்கான வசதியை ஏற்படுத்தினாலும், வீடு ஒப்படைப்புக்குப் பின், இதைத்தொடர்ந்து பராமரிப்பது கேள்விக்குறியாகிறது. இதை, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பிரிவு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கண்காணிக்க வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்புகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக அமைப்பதில்லை. கட்டுமான திட்ட அனுமதி பெறும் போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான வடிவமைப்பு விபரங்களை தெரிவித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள், அவ்வாறு முறையாக தெரிவிக்காமல் அனுமதி பெறுகின்றன. அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. அதே நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டுமான நிறுவனங்கள் கழிவுநீர் சுத்திகரிப்புக்கான வசதியை ஏற்படுத்தினாலும், வீடு ஒப்படைப்புக்குப் பின், இதைத்தொடர்ந்து பராமரிப்பது கேள்விக்குறியாகிறது. இதை, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பிரிவு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us