UPDATED : நவ 01, 2026 07:57 PM
ADDED : நவ 01, 2026 07:54 PM

சிங்கபெருமாள் கோவில்: திருக்கச்சூரில் காலி இடத்தில் கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குப்பை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பெரியார் நகர் பகுதியில் பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த தொழிற்சாலை மூடப்பட்டது.
தொழிற்சாலையை சுற்றி செடிகள் வளர்ந்து புதர் சூழ்ந்து இருந்தது. இந்த இடத்தை இரவு நேரங்களில் ‘குடி’மகன்கள் 'மது அருந்தும் கூடாரமாக மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை இந்த பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பை திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து வந்த மகேந்திரா வேர்ல்ட் சிட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். குப்பை தீப்பற்றி எரிந்து கரும்புகை பரவியதால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்னை ஏற்பட்டது.
