/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குப்பை வாகனங்களை நிறுத்துவதால் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல்

ADDED : மார் 11, 2024 04:41 AM

செம்பாக்கம், : தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம் செம்பாக்கம் மண்டல அலுவலகத்தின் பின்புறம், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
இங்கு, ஏழை, எளிய மக்கள், நிச்சயதார்த்தம், திருமணம், காதணி, சீமந்தம், மஞ்சள் நீராட்டு, பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை, குறைந்த செலவில் நடத்தி வந்தனர்.
மக்களுக்கு பயனுள்ளதாக இருந்த சமூக நலக்கூடம், சமீபகாலமாக பயன்படுத்த முடியாத நிலைமைக்கு மாறிவிட்டது.
தற்போது அந்த வளாகம் குப்பை வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், துாய்மை பணியாளர்கள் தங்கும் இடமாகவும் மாறிவிட்டது. நலக்கூடத்தின் சமையல் கூடம், துணி துவைக்கும் பகுதியாக மாறிவிட்டது.
இதனால், ஏழை, எளிய மக்கள் நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். முன்பதிவு செய்ய வருவோர், குப்பை வாகனங்களால் நாற்றம் அடிப்பதை பார்த்து, திரும்பிச் சென்று விடுகின்றனர்.
ஏழை, எளிய மக்களுக்காக கட்டப்பட்ட சமூக நலக்கூடத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.