/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அமந்தங்கரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்
/
அமந்தங்கரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்
ADDED : மே 19, 2025 02:38 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே அமந்தங்கரணை கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் திரவுபதி அம்மனுக்கு பாரத திருவிழா விமரிசையாக நடத்தப்படும்.
இந்த ஆண்டிற்கான பாரத திருவிழா, கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் மாலை மகாபாரத சொற்பொழிவு நடந்து, தெருக்கூத்து நாடகமும் நடத்தப்பட்டு வந்தது.
நேற்று மதியம், 1:30 மணியளவில், பாரத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், உற்சவத்திற்காக கோவில் அருகே, களிமண்ணால் பிரமாண்டமாக, 25 அடி நீள துரியோதனன் சிலை செய்து வைத்து, பீமன் - - துரியோதனன் போரிடுவது நாடகமாக நடந்தது. இறுதியில், திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், அமந்தங்கரணை மற்றும் சுற்று வட்டார கிராமத்தினர் பங்கேற்றனர்.