/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்வி அவசியம் ஒரத்தியில் பேரணி
/
கல்வி அவசியம் ஒரத்தியில் பேரணி
ADDED : ஜூலை 16, 2025 01:04 AM

அச்சிறுபாக்கம்:ஒரத்தி ஊராட்சியில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, கல்வியின் அவசியம் குறித்து, தனியார் பள்ளி சார்பில் , விழிப்புணர்வு பேரணி நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், ஒரத்தி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
பின், குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு, கல்வியின் அவசியம் குறித்து, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், ஒரத்தி பஜார் வீதி, பள்ளிக்கூட வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
இதில், ஒரத்தி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பூபாலன் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.