/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : ஜூலை 23, 2025 01:50 AM
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில், மின் மோட்டார் பழுது நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து, ஒருவர் உயிரிழந்தார்.
சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆண்டவன், 50; எலக்ட்ரீஷியன்.
நேற்று முன்தினம் இரவு, தனியாருக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள நீர் ஏற்றும் மின்மோட்டாரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மேல்மருவத்துார் போலீசார், ஆண்டவன் உடலை பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், நேற்று பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து, மேல்மருவத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.