/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி
/
சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி
ADDED : பிப் 02, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் மின்வாரிய அலுவலக மேற்கு பிரிவில் கம்பியாளராக பணிபுரிந்து வந்தவர் பன்னீர்செல்வம், 49, இவர் நேற்று பணி முடிந்து வீடு திரும்பினார். ஊரப்பாக்கம் சிக்னல் அருகே செல்லும் போது,
பின்னால் வந்த மினி லாரி, தனது கட்டுப்பாட்டை இழந்து, அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் சாலையில் துாக்கி வீசப்பட்டு, தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பன்னீர் செல்வத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக , குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து , வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.