/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் அருகே மின்கசிவு குடிசை வீடு எரிந்து நாசம்
/
சித்தாமூர் அருகே மின்கசிவு குடிசை வீடு எரிந்து நாசம்
சித்தாமூர் அருகே மின்கசிவு குடிசை வீடு எரிந்து நாசம்
சித்தாமூர் அருகே மின்கசிவு குடிசை வீடு எரிந்து நாசம்
ADDED : அக் 20, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம், 42; கூலி தொழிலாளி. நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டின் மின் பெட்டியில் மின்கசிவால் ஏற்பட்டு, அதிலிருந்து வந்த தீப்பொறி, குடிசையின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசை முழுதும் எரிந்தது. இதையறிந்த பாலசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து, சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.