/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இல்லீடு துணை மின் நிலையத்திற்கு பொறியாளர் நியமிக்க வலியுறுத்தல்
/
இல்லீடு துணை மின் நிலையத்திற்கு பொறியாளர் நியமிக்க வலியுறுத்தல்
இல்லீடு துணை மின் நிலையத்திற்கு பொறியாளர் நியமிக்க வலியுறுத்தல்
இல்லீடு துணை மின் நிலையத்திற்கு பொறியாளர் நியமிக்க வலியுறுத்தல்
ADDED : மார் 06, 2024 12:18 AM
சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே இல்லீடு கிராமத்தில், 110/11 கே.வி., திறன் கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
மணப்பாக்கம், காவனுார், அகரம், அரசூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகள், கடைகள், விவசாய மின்மோட்டார்களுக்கு, இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.
துணை மின் நிலையத்தில் பணியாற்றி வந்த இளநிலைப் பொறியாளர், கடந்த ஆண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பின் தற்போது வரை புதிய நிரந்தர இளநிலைப் பொறியாளர் நியமிக்கப்படவில்லை. நுகும்பல் இளநிலைப் பொறியாளர் அருண்குமார் கூடுதலாக கவனித்து வருகிறார்.
நிரந்தர இளநிலைப் பொறியாளர் இல்லாததால், பணிகள் தாமதமாக நடப்பதாக கிராமவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், இரண்டு துணை மின் நிலையத்திற்கு ஒரே இளநிலைப் பொறியாளர் உள்ளதால், அதிகாரிகளுக்கு அதிக பணிச்சுமை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் இல்லீடு துணை மின் நிலையத்திற்கு, நிரந்தர இளநிலைப் பொறியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, அச்சிறுபாக்கம் செயற்பொறியாளர் செந்தாமரை கூறியதாவது:
இல்லீடு துணை மின் நிலையத்திற்கு நிரந்தர இளநிலைப் பொறியாளர் இல்லாததால், சிறப்பு கவனம் செலுத்தி அலுவலகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இல்லீடு துணை மின் நிலையத்திற்கு, விரைவில் நிரந்தர இளநிலைப் பொறியாளரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

