/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 13, 2025 12:24 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் கிராமத்தில் கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் நல்லதண்ணீர் குளதின் அருகே வீடு, வணிக கடைகள், கோவில் உள்ளிட்டவை இருந்தன.
இவை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி சமுக ஆர்வலர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று திருப்போரூர் தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நெல்லிக்குப்பம் கிராமம், புல எண் 141, குளம் வகைப்பாட்டில், 50 சென்ட் நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருந்தன. நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது. 14ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 2.50 கோடி ரூபாய் இருக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.