
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா நகர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விஷ்ணுபிரியா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் பொதுமக்கள் பங்கேற்று பொங்கல் விழாவை சிறப்பித்தனர். பொங்கல் விழாவை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.