/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலிபர் இறப்பில் சந்தேகம் உடல் தோண்டி எடுப்பு
/
வாலிபர் இறப்பில் சந்தேகம் உடல் தோண்டி எடுப்பு
ADDED : அக் 01, 2024 12:25 AM
குன்றத்துார், - குன்றத்துார் அருகே மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராம்ராஜ், 36. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 19ம் தேதி, வீட்டின் படுக்கை அறையில் ராம்ராஜ் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், மதனந்தபுரம் சுடுகாட்டில், ராம்ராஜ் உடலை புதைத்து, உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், ராம்ராஜின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரின் அண்ணன் ராஜிவ்காந்தி, மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து மாங்காடு போலீசார், வருவாய் துறை முன்னிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மதனந்தபுரம் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட ராம்ராஜ் உடலை, நேற்று தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் பொறுத்து, நடவடிக்கை இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.