/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரணவமலை கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
/
பிரணவமலை கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
பிரணவமலை கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
பிரணவமலை கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 20, 2025 07:18 PM
திருப்போரூர்:திருப்போரூர் பிரணவ மலையில் உள்ள கைலாசநாதர் கோவில், பழமை வாய்ந்தது. அகத்தியர், முருகப் பெருமானிடம் பிரணவத்தின் பொருள் கேட்க, பிரணவமே மலையாக காட்சியளித்தது என்றும், திருமாலும், மஹாலட்சுமியும் இக்கோவிலில் வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
இக்கோவில், கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.
இந்த மலைக்கோவிலில், தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜையுடன், மாதத்தில் இரண்டு முறை பிரதோஷ வழிபாடும் நடத்தப்படுகிறது.
சுற்றுவட்டார கிராம மக்கள், இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
சிறப்புமிக்க இக்கோவில், 2010ம் ஆண்டு இவ்வூர் உபயதாரர் வாயிலாக சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆகம விதிப்படி, கோவில் கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
அந்த வகையில், இக்கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.