/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதலியார்குப்பம் போட்ஹவுஸில் படகுகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
முதலியார்குப்பம் போட்ஹவுஸில் படகுகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
முதலியார்குப்பம் போட்ஹவுஸில் படகுகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
முதலியார்குப்பம் போட்ஹவுஸில் படகுகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 19, 2025 01:37 AM

செய்யூர்:செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளிப்பகுதியில் 'ரெயின் ட்ராப் போட் - ஹவுஸ்' உள்ளது.
பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருகைதந்து, தங்களின் விருப்பத்திற்கேற்ப படகுகளில் சவாரி செய்து, தனி தீவு போல காட்சியளிக்கும் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஓய்வு எடுக்கும் கூடாரங்களில் அமர்ந்து பொழுது போக்குவது வழக்கம்.
இந்நிலையில் போட் - ஹவுஸில் சில படகுகள் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளதால், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப்பயணியர் வரும்போது, போதிய படகு இல்லாமல் சவாரி செய்ய இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் கோடை விடுமுறை துவங்க உள்ளதால், அதிக அளவில் சுற்றுலாப்பயணியர் வர வாய்ப்பு உள்ளது.
ஆகையால் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள படகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சுற்றுலா பயணியர் எதிர்பார்கின்றனர்.

