/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதிப்பு கூட்டு தொழில் துவங்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
மதிப்பு கூட்டு தொழில் துவங்க விவசாயிகளுக்கு அழைப்பு
மதிப்பு கூட்டு தொழில் துவங்க விவசாயிகளுக்கு அழைப்பு
மதிப்பு கூட்டு தொழில் துவங்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 19, 2025 07:13 PM
செங்கல்பட்டு:மதிப்பு கூட்டு தொழில் துவங்க, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், வேளாண்மைத் துறையின் மூலமாக, தேசிய உணவு எண்ணெய் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு புதிய ரக விதைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள் மதிப்புக்கூட்டு தொழில்கள் துவங்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் எண்ணெய் பிழியும் இயந்திரம், மரச்செக்கு, கடலை உடைக்கும் இயந்திரம், எண்ணெய் சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை அமைக்க, 33 சதவீதம் மானியத்தில் அதிகபட்சமாக, 9.9 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது.
இதற்கு தகுதியுடைய விவசாயிகள், வேளாண்மை துணை இயக்குநர் அல்லது செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குநரை அணுகி பயன் பெறலாம்.