/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாழடைந்த சுகாதார நிலைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை
/
பாழடைந்த சுகாதார நிலைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை
ADDED : அக் 19, 2025 09:19 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த ஆணைக்குன்னத்தில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே, பாழடைந்துள்ள துணை சுகாதார நிலையத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆணைக்குன்னம் ஊராட்சியில், 30 ஆண்டுகளுக்கு முன், அங்கன்வாடி மையம் அருகே துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது.
தற்போது, கட்டடத்தில் செடிகள் வளர்ந்து, பாழடைந்து பயன்பாடு இன்றி உள்ளது.
பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்கும் இடமாக உள்ளது. அங்கன்வாடி மையம் அருகே பாழடைந்த கட்டடம் உள்ளதால், அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, பாழடைந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து அப்புறப்படுத்த, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.