/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தானிய உலர்களம் அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
/
தானிய உலர்களம் அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : செப் 11, 2025 01:41 AM

சித்தாமூர்:பெரியகளக்காடி ஊராட்சியில், சாலையில் தானியங்களை உலர்த்துவதால் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தனியாக உலர்களம் அமைக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அடுத்த பெரியகளக்காடி ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஏரி மற்றும் கிணற்று நீர் பாசனம் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், வேர்க்கடலை, கேழ்வரகு, சோளம், தர்ப்பூசணி போன்றவை பயிரிடப்படுகின்றன.
ஆனால், இங்கு தானிய உலர்களம் வசதி இல்லாததால், விவசாயிகள் அறுவடை செய்யும் தானியங்களை, போந்துார் - அச்சிறுபாக்கம் மாநில நெடுஞ்சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர்.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி காயமடையும் அபாயம் உள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து, விவசாயிகள் வசதிக்காக தானிய உலர்களம் அமைக்க நடவடிக்கை வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.