/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பனப்பாக்கத்தில் மனுநீதி நாள் 23 பயனாளிகளுக்கு நிதியுதவி
/
பனப்பாக்கத்தில் மனுநீதி நாள் 23 பயனாளிகளுக்கு நிதியுதவி
பனப்பாக்கத்தில் மனுநீதி நாள் 23 பயனாளிகளுக்கு நிதியுதவி
பனப்பாக்கத்தில் மனுநீதி நாள் 23 பயனாளிகளுக்கு நிதியுதவி
ADDED : ஏப் 24, 2025 01:59 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே பனப்பாக்கம் கிராமத்தில், நேற்று நடந்த மனுநீதி நாள் முகாமில், 23 பயனாளிகளுக்கு 52 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் வட்டம், கூடுவாஞ்சேரி குறு வட்டத்திற்கு உட்பட்ட மதுரா பனப்பாக்கம் கிராமத்தில், மக்களைத் தேடி முதல்வர் திட்டத்தின் கீழ், மனு நீதி நாள் முகாம் நேற்று காலை நடந்தது.
இதில் கூட்டுறவுத் துறை தொழில் கடன், சிறு வணிக கடன், இயற்கை மரண உதவித் தொகை என, 23 பயனாளிகளுக்கு, 52 லட்சம் ரூபாய் நிதி உதவி, காசோலையாக வழங்கப்பட்டது.
தவிர, 60க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து புகார், கோரிக்கை என, விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள், சமூக நலன், மாற்றுத் திறனாளிகள், தொழிலாளர் நலன், கால்நடை உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த அரங்குகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் வாயிலாக தகுதியுடையோர் எவ்வாறு பயன்பெறுவது என்பது குறித்து விளக்கப்பட்டது.
திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் முரளி, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா ஆகியோர் தலைமையில், பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு, மனுக்களும் பெறப்பட்டன.

